tamilnadu

img

காஷ்மீர் சிறுமிகளை திருமணம் செய்ய ஆர்வமாக உள்ளோம்...

முசாபர்பூர்:
பாஜக தொண்டர்கள் காஷ்மீர் சிறுமிகளைத் திருமணம் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள் என்று, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ விக்ரம் சிங்சைனி, வக்கிரமாகவும் திமிராகவும் பேசியுள்ளார்.“காஷ்மீர் விவகாரத்தை பேசத் துவங்கி விட்டாலே, பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்து விடுகிறார்கள்”என்றும் “அவர்கள் இனிமேல் காஷ்மீரில் உள்ள அழகான பெண்களைத் திருமணம் செய்து கொள்ள முடியும்” என்றும் கூறியுள்ளார்.

காஷ்மீருக்கான 370, 35ஏ சிறப்பு சட்டப்பிரிவுகளின் படி, காஷ்மீரிப் பெண்கள், காஷ்மீரி அல்லாத ஆண்களை திருமணம் செய்துகொண்டால், அவர்கள் ‘காஷ்மீர்’ மாநிலத்திற்கான குடியுரிமையை இழந்து விடுவார்கள். சொத்துக்களையும் இழக்க வேண்டியதாகும். தற்போது காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து 370 ரத்து செய்யப்பட் டுள்ளதால், இனிமேல் காஷ்மீர் பெண்களை யாரும் திருமணம் செய்து கொள்ளலாம்என்பதால், “காஷ்மீர் சிறுமிகளைத் திருமணம் செய்வோம்” என்று சைனி வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார்.இதே விக்ரம் சைனி, சிலமாதங்களுக்கு முன்பு, “இந்தியாவை பாதுகாப்பற்ற நாடாக உணருபவர்கள் மீது குண்டுவீச வேண்டும்” என்றும் பேசியிருந்தார் என் பது குறிப்பிடத்தக்கது.